Thursday, December 30, 2010

இந்தியா 3030

இந்தியா வந்து 90 நாட்கள் ஆகிவிட்டது.  ஊருக்கு வந்த சில தினங்களிலேயே அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது..... விதியின் சதியா என்பது தெரியவில்லை.

இனிமேல் யாரவது '2020வில் இந்தியா வல்லரசு ஆகும் - சீனாவுடன் போட்டிபோட இந்தியாவைவிட யாருக்கு தகுதி இருக்கிறது - உலகிலேயே சீனாவுக்கு அடுத்து நம்ம நாடுதான் பொருளாதரத்தில் சிறந்து விளங்குகிறது' என்று 'தேசப்பற்றுடன் கனவு கண்டு கொண்டிருப்பவர்களை' பார்த்தால் அனுதாபம் படுவதைவிட வேற என்ன செய்ய...?



எத்தனை பெரியாரும், காந்தியும் வந்தாலும் திருத்தவே முடியாத ஒரு சமூகம்  ஊழலில் திளைத்தவர்களாகவும் , நேர்மை துளியும் இல்லாதவர்களாகவும், வார்க்கப்பட்டு, வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

@

ஆகஸ்டு, 27,2010

Monday, December 13, 2010

நந்தலாலா

மாதம் ஒன்று கிறுக்க வேண்டும் என்று தோன்றினாலும், நேரமின்மையும், சோம்பேறித்தனமும் இந்தப்பக்கமே வரமுடியாமல் செய்கிறது.

நந்தலாலா, அம்பேத்கார் பார்க்கவேண்டும். ஆனால் அதுக்குள் அம்பேத்கார் காலை 9 மணி காட்சி மட்டும் பேருக்கு போட்டுவிட்டு ''சிக்கு புக்கு'' ஓடிக் கொண்டிருக்கிறது.  அதே நிலை "நந்தலாலா"வுக்கு ஆகும் முன் பார்த்துவிடலாம் என்று எண்ணத்தில் நேற்று பார்த்தது.
 
மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் எனக்கு பிடித்திருந்தது. 

நந்தலாலா - 

இளையராஜா, மிஷ்கின், அந்த குட்டிபையன் தவிர்த்து - பள்ளி மாணவி, லாரி ஓட்டுநர், இளநீர்க்காரக் கிழவர், போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அந்த நபர்  என்று படம் முழவதும் வரும் அனைத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாழ்க்கைக்கு பல அர்த்தங்கள் சொல்பவை!


இறுதியாக - 

“நீங்க என்ன சாதி அண்ணே?”
“மெண்டல்”
“அப்படி ஒரு சாதி இருக்கா அண்ணே?”

Thanks, மிஷ்கின்!

Sunday, July 18, 2010

இந்தியா 2010 - 'டாப் 10'

இந்தியா 2010 - ‘டாப் 10’ பட்டியல் போட்டால்…

1.    நான்கு வழி தேசியநெடுஞ்சாலை ஒரளவு முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் பல ஊர்கள் காணமல் போயிவிட்டன. ஆனால் லாரிகளும், பேருந்துங்களும், கார்களும் போற வேகத்தைப் பார்த்தால் காரை எடுக்கவே பயமாக உள்ளது. இதில் தினமும் 2-3 விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வில்லையென்றால்  இந்த ‘நான்கு வழிஇரத்தச்சாலை’யில் இதைவிட பயரங்களை பார்த்து தாங்கிக் கொள்ளகூடிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்வாராக!

2.    பணத்திற்கு மதிப்பே இல்லை! ஆனால் எங்கும் கூட்டம் குறைவாக இல்லை. பணத்திற்கு ஏற்றாற்போல் சேவையும் இல்லை. ‘முடிந்தவரை இவனிடம் எவ்வளவு கறக்கலாம்‘ என்பது போலவே பார்க்கிறார்களோ என்ற மனப்பிராந்தியை தவிர்க்க முடியவில்லை!

3.    விலைவாசி! அம்மாடியோவ்… தக்காளி கிலோ 40ரூபாய்,  மட்டன் 250, சிக்கன் 200, ஆப்பிள் 120,  நவ்வாப்பழம் 160!!

4.    சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெகா, வசந்த், பாலிமர், அபி, தமிழன், சித்திரம் என்று எத்தனை வந்தாலும் வீட்டில் அனைவருக்கும் அழ பிடித்த மெகா ஸாரி… நெடுந்தொடர்; ‘நாதஸ்வரமும்’, ‘செல்லமேமும்’ மற்றும் பல! வாழ்க சன்!! இதைவிட்டால் SSJ2, நீயா நானா, Z தமிழில் டாப் 10 செய்திகள் OK!

5.    Pogoவைத் தவிர மற்ற எல்லா குழந்தைகள் சேனல்களிலும் [Cartoon Network, Disney, Nick, Discovery] தமிழ் மொழிபெயர்ப்பு! அடக்கொடுமையே..சுட்டி டிவி, சித்திரம் போன்ற தமிழ் சேனல்களும் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சிகூடவா தமிழிலில் தயாரிக்க முடியவில்லை!

6.    கேபிளுடன், Tata Sky, Sun Direct, Dish என்று டிஜிட்டல், HD என்று எல்லாரும் மிரட்ட, நம் முதல்வர், டாக்டர் கலைஞர் கொடுத்த இலவச வண்ணத் தொ(ல்)லைக்காட்சியில் பார்க்க கேபிள் போதாத என்ன?

7.    மொபைல் இன்டர்நெட் மிகவும் பிரபலம்! BSNLக்காக மாதங்கள், வருடங்களாக காத்திருக்க வேண்டியதில்லை. TATA Photon, MTS என்று கூப்பிட்ட உடனே வீட்டில் வந்து நிற்கிறார்கள்! [இதில் MTS நல்லாயிருக்கு என்பது என் அனுபவம்.]

8.    போஸ்டர் போயி எங்கும் பேனர்கள், பிரமாண்ட டிஜிட்டல் அட்டைகள். திருமணம், பூப்புனித நீராட்டு விழாவிலிருந்து, பெருந்தலைவர்கள் வரை! அதுவும் தலைவர்களுக்கு நமது கழக கண்மணிகள் காட்டும் விசுவாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது: தென்னிந்தியாவின் சேகுவராவே, இளம் பெரியாரே, தமிழின் செம்மொழியே, இனக்காவலரே, நவீன காமராஜரே……….

9.    20-30 பேரே திரையரங்குகளிலிருந்த ‘ராவணனில்’ ரஞ்சிதாவுக்கும் விசிலடிக்கும் (அதே) ரசிக சிகாமணிகள்! ஐஸ்வர்யாவுக்கும், ப்ரியாமணிக்கும் கேக்கவே வேண்டாம்.

10.    பள்ளிக்கூடம், கல்லூரிகள்!!!

Wednesday, July 14, 2010

இந்தியா 2010

ஊர் வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. குழந்தைகளை முதல் வருடமே பெரிய நகரங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் சேர்த்து ‘மிரட்ட’ வேண்டாமே, நமக்கு தெரிந்த ஊரிலுள்ள பள்ளிகளில் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் திருநெல்வேலியில் தெரிந்த பள்ளியில் சேர்த்தாயிற்று!

வருடத்திற்கொருமுறை ஊருக்கு வந்தாலும், 15-20 நாட்களில் பார்க்கிற இந்தியாவிற்கும், இன்னும் 15-20(!) வருடங்கள் இங்கதான் அப்படினு பார்க்கிற இந்தியாவிற்கும் ரொம்பவே வித்தியாசம்! அப்ப இருந்த ‘பெருந்தன்மை’ இப்ப எங்க போச்சி?


2003ல் ஹைதராபாத்தில் ‘பஞ்சகுட்டாவில்’ நல்ல வசதியான இரண்டு அறையுள்ள வீட்டிற்கு குடுத்த வாடகை 7000 ரூபாய். 2010ல் இப்பொழுது  நெல்லை மாநகரத்தில் கொடுக்கும் வாடகை 6000ரூபாய்! பத்து மாதம் அட்வான்ஸ்யை ஐந்து மாதமாக குறைக்க சொல்லி கேட்டதற்கு வீட்டுக்கு சொந்தகாரர் கேட்ட கேள்வி ‘உங்களால இத குடுக்க முடியாத என்ன?’  (ம்ம்ம்..அது சரி!)

Friday, June 11, 2010

டிசம்பர் 3, 1984

டிசம்பரில் 3, 6 நம் தேசத்தின் கறுப்பு தினங்கள்!

குறிப்பாக 2010 ஜூன் 7 ம் தேதி வந்த தீர்ப்பு. 26 ஆண்டுகளுக்கு முன்னால், போபாலில் ஏற்பட்ட நச்சு வாயு விபத்து தொடர்பான வழக்கில்எட்டு பேரை குற்றவாளிகள் என்று போபால் நீதிமன்றம் முடிவு செய்தள்ளது!

1984 டிசம்பர் 3 அதிகாலையில் நடந்த நச்சு வாயு விபத்தில் 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். நச்சு வாயால் பாதிக்கப்பட்டு மேலும் 20,000க்கும் அதிகமானோர் இறந்தனர். குறைந்தது ஆறு லட்சம் பேர் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளில் நூற்றுக்கணக்கானோர் இன்றும் உடல் ஊனத்துடன் பிறக்கின்றனர். இதற்கெல்லாம் யூனியன் கார்பைட் நிறுவனம்

கொடுத்த நஷட் ஈடு $441 மில்லியன்!


இந்தக் கொடூர விபத்தில் நடைபெற்ற மனிதப் பலிகளுக்கு யார் காரணம் என்று 26 ஆண்டுகளாக நமது அரசாங்கமும், நீதி மன்றமும் 8 பேரைக் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்துள்ளன. தண்டனை..? இரண்டு ஆண்டுகள் சிறை + சில இலட்சங்கள் அபராதம். இதற்குப் பின் 'குற்றவாளிகள்' மேல் முறையீடு செய்வார்கள். அவர்களும் நிரபராதிகள் என்று உச்ச நீதிமன்றம் சொன்னாலும் சொல்லலாம். அப்பொழுதும் நமது சட்ட அமைச்சர் கடுமையான அதிருப்பதியை மீடியாக்களுக்கு தெரிவிப்பதுடன் அவருடைய பங்கும் முடிந்தது.

நமது  பிரதம மந்திரி சோனிஜிக்கும், ராகுலுக்கும் நேர்மையாய் இருப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

வாழ்க நம் தேசத்தலைவர்கள்!

Tuesday, April 27, 2010

அங்காடித் தெருவும், வெரிகோஸ் நோயும்

திரையரங்கில் நான்கே பேர். எங்களுக்காக சிறப்பு  (கடைசி) காட்சி!

மசாலா படங்களையே பார்த்து பழக்கமான இரசனைக்கு இந்தப் படம் மனதைவிட்டு அகல இரண்டு, மூன்று நாட்களாவது ஆனாது.


படத்தை கடைசி இருபது நிமிடங்களுக்கு முன்னாலேயே முடித்திருக்கலாம். பஸ்ஸில் அடிபட்டு சாகும் லிங்குவின் அப்பாவிலிருந்து, விபத்தில் கால்போகும் கனிவரை படம் 'அளவுக்கு அதிகமாகவே' எதிர்மறை காட்சிகள்.  ஏதாவது ஒரு காட்சியில் யாரையாவது தனியாக காட்டினால் இவுங்களும் காலியா?! என்ற பதை பதைப்பை தவிர்க்க முடியவில்லை. அந்தளவுக்கு  அனைத்து கதாபாத்திங்களுக்கும் வாழ்க்கையை ஒரு பெரும் சுமையாக சுமந்து செல்கிறார்கள்.

இருப்பினும், தமிழ் திரையுலகில் இப்படி ஓர் அழுத்தமான பதிவுக்கு வசந்தபாலன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

படத்தில் ஒரு கதாபாத்திரம் 'வெரிகோஸிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போவதுபோல வருகிறது. (அந்த கதாபாத்திரத்தையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை ;( )

'வெரிகோஸிஸ்' வந்தால் இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் இயக்குநரின் கற்பனையாகதான் இருக்க வேண்டும். இந்த நோயை அறுவை சிகச்சை மூலம் குணப்படுத்தகூடிய ஒரு ‘மெடிகல் டிவைஷ்’ (Medical Device) கம்பெனியில் (VNUS) வேலை செய்வதால் அந்த நோயைப் பற்றி ‘கொஞ்சம்’ அறிமுகமுண்டு.

அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்வர்களுக்கு இந்த நோய் வரலாம். ஆண்களைவிட பெண்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு. கால்வீக்கம், கால் பகுதி நரம்பில் இரத்தப்போக்கு இல்லாததால் ஏற்படும் வலி என இந்த நோய்க்கான அறிகுறி.



நம்ம நாட்டுல இந்த நோய்க்கான விழிப்புணர்வு எந்தளவுக்கு இருக்கிறதுனு தெரியலை. மேலைநாடுகளில் Cosemtics வகையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். மிகவும் எளிமையான, அன்றே வீடும் திரும்பவுமான எளிதான அறுவை சிகிச்சை!

எங்கள் நிறுவனம் தயார் செய்யும் மருத்துவ கருவியின் பெயர் Vnus Closure Procedure. ஒரு சில நிமிட செயல்முறை வீடியோ இங்கே!

Thursday, April 1, 2010

போகிற போக்கில் - ஏப்ரல் 1,2010

இப்பொழுதுதான், DVDயில் 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்தேன். ஒரு அருமையான fantasy கதையை சோழர்கள், பாண்டியர்கள்னு குழப்பி, இசை, கார்த்திக்கின் கடுப்படிக்கும் வசனம்/காமெடி, ரீமாசென்னு மேலும் வெறுப்பேத்தி..... 'ஆளை விடுங்கடா சாமி'னு ஒரு வழியா முழுப்படத்தையும் பார்த்தோம்(!).

சில நேரங்களில் படத்தைவிட பதிவுலகில் வரும் விமர்சனங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கும். அந்த வகையில் இந்தப்படத்தை தாளரமாக சேர்க்கலாம். எவ்வளவுதான் உழைப்பு...மண்ணாங்கட்டினு பேசினாலும் 2 1/2 மணிக்கு அப்புறம் என்ன சொல்லவாராங்கனு புரியமா குழப்பும்போது எதையும் பாராட்ட தோன்றவில்லை!
@

எப்பொழுதுமே மலையாள படங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அவர்கள் எடுக்கும் கதைகளம், திரைக்கதை அதற்கு உயிர் கொடுக்கும் அருமையான நடிகர்-நடிகைகள்!

சமீபத்தில் பார்த்தது பிளஸ்ஸி(Blessy)யின் 'பிரம்மரம் (மலையாளம்)'. தமிழிலில் 'வண்டு'னு அர்த்தம்! சரியான தலைப்புதான்...

முதல் பகுதியில், விறு விறுப்புக்காக திரைக்கதை தடுமாறினாலும் இரண்டாம் பகுதி மனதை அள்ளுகிறது. வித்தியாசமான கதைகளம். சிவன்குட்டியாக மோகன்லால்! அவர் நடிப்புக்கு சரியான தீனி. அவருடைய மனைவியாக பூமிகா. அழுகுதான்..மலையாள கதாபாத்திரத்துக்கு  ஒத்துவரவில்லை!

பிளஸ்ஸியின் 'காழ்ச்சா' இன்னும் பார்க்கவில்லை. 'தன்மந்ரா' அருமையான திரைப்படம்! 'பலுங்கு' ஓகே!

'தன்மந்ரா' அளவுக்கு 'பிரம்மரம்' மனதில் பதியவில்லை. ஆனால் மோகன்லாலுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்!

@

இந்தவாரம் புனித வாரம் மற்றும் கிறிஸ்துவின் உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்).

தவக்கால ஆரம்பத்தில் - ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடமாவது பைபிள் படிக்கணும் நினைப்பு, நினைவாகவே இருக்கிறது. அதற்குள் ஈஸ்டரும் வந்து விட்டது. இனி அடுத்த ஆண்டுதான் நினைவுக்கு வரும்.

கல்லூரி நாட்களில் தவக்காலத்தில் நான்-வெஜிடேரியன் சாப்பிடாமல் இருப்பது பெரிய விசயமாக இருந்ததில்லை. இப்பொழுது...அதுவும் வெளிநாட்டில் இருக்கும் பொழுது அதுவே பெரிய சாதனையாக இருக்கிறது.

ஈஸ்டருக்கு அப்புறம்(!) ஒரு வருடத்திற்கு வெஜிடேரியனாக மாறலாம் என்பது எண்ணம். நண்பன் FBல் சொன்ன ஜப்பானிய தத்துவம் நினைவுக்கு வருகிறது..'ஆரம்பிப்பது எளிது. தொடருவது கடினம்!'

பார்க்கலாம்!

@@

Friday, March 12, 2010

NASDAQ - 10 ஆண்டுகள்

மார்ச் 10, 2000 NASDAQ 5048 புள்ளிகளுடன் அதிஉச்சத்தில் இருந்த காலம்.

எந்த .com பங்குகள் வாங்கினாலும் இலாபம் தரக்கூடியதாகவே இருந்தது. அந்த கால கட்டத்தில் சும்மா வேடிக்கை பார்த்ததற்கு பதில் 'ஏதாவது' பங்குகள் வாங்கி போட்டிருந்தால் கொஞ்சம் சீக்கிரமாகவே ஊருக்கு கிளம்பி போயிருக்கலாம்?

பத்து ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டி பறந்த - Netscape, pet.com போன்ற கம்பெனிகள் இப்பொழுது இருந்த தடமே தெரியவில்லை. MCI டெலிகாம், என்ரான் என்று திவால் ஆன கம்பெனிகளின் பட்டியல் நீளம்.



2003-2004ல் பரஸ்பரநிதி (Mutual Fund) கம்பெனியில் வேலை. அதுவே பங்குச்சந்தை. பரஸ்பரநிதியின் மேல் ஆர்வம் வர காரணமாக இருந்தது. கிராமங்களிலும், நகரங்களிலும் இந்தியா ஒளிர்ந்ததோ இல்லையோ பங்குச்சந்தையில் நன்றாகவே ஒளிர்ந்தது. பூவா தலையா என்று போட்டு ஏதாவது சில பங்குகளிலும், பரஸ்பரநிதியிலும் முதலீடு செய்த காலகட்டம். கிளி ஜோசியம் போல எந்த சீட்டு எடுத்தாலும் இலாபகரமாகவே இருந்திருக்கும்.

பத்து வருடங்களுக்கு [மார்ச் 10, 2010] பிறகு NASDAQ ன் நிலை 2340 புள்ளிகள். வாழ்க்கையின் தத்துவம் போல அமெரிக்க பங்குச்சந்தை இருந்த இடத்திற்கே வந்து நிற்கிறது.

நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாகிவிட்ட Google, Twitter, Facebook, iPhone போன்றவைகள் முளைத்து, விஷ்பரூபம் எடுத்திருப்பது இந்த காலகட்டத்தில்தான்!

Wednesday, March 3, 2010

மெய்ப்பொருள்




எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

Wednesday, February 24, 2010

தோழர் உ.ரா.​ வரதராசன்

முதலில் எந்த வரதராஜன் என்ற குழப்பம் இருந்தாலும், படங்களையும், செய்திகளையும் வாசிக்கும் பொழுது மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர். அறுபத்தி நான்கு வயதை கடந்தவர். நாற்பாதாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வு! கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்திருக்கிறார். ஊழலற்றவர். எளிமையானவர்.  ஆனால், இறுதியில் அவர் எடுத்த முடிவு... சில நிமிடங்கள் நினைத்து பார்த்தால், மனதில் வருத்தத்தயே தருகிறது.

Wednesday, February 17, 2010

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு 2010

கடந்த வெள்ளி (பிப்ரவரி 12, 2010) கனடாவின் வேன்குவர் (Vancouver)ல் குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள் ஆரம்பமானது. அருமையான, கண்கவர் தொடக்க நிகழ்வுகள்.



Tuesday, February 16, 2010

நீங்கள் கேட்டவை ...

நான் வாசித்த தகவல் ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அன்றைய வேலையை முடித்த இளைஞன் ஒருவன், அந்த உணவு விடுதிக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தான். தெருவில் 100 ரூபாய் நோட்டு ஒன்று அவன் கண்ணில் பட்டது. அங்குமிங்கும் பார்த்தான். அதைத் தேடி யாரும் வரவில்லை. எனவே அதை எடுத்துத் தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். பின்னர் தனது இரண்டு சக்கர மோட்டார் வண்டியை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போனான். ஆனால் அவ்விடத்தில் அதைக் காணவில்லை. ஒன்றும் புரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்த போது, நடைபாதையில் உட்கார்ந்திருந்த ஒரு சாது சொன்னார் - 'இங்கே வண்டிகளை நிறுத்தக் கூடாது என்று சொல்லி காவல்துறை அதை இழுத்துக் கொண்டு போய்விட்டது' என்று.

Thursday, February 11, 2010

முள்ளும் மலரும்

பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்....

Thursday, January 21, 2010

Related Posts with Thumbnails