Tuesday, April 27, 2010

அங்காடித் தெருவும், வெரிகோஸ் நோயும்

திரையரங்கில் நான்கே பேர். எங்களுக்காக சிறப்பு  (கடைசி) காட்சி!

மசாலா படங்களையே பார்த்து பழக்கமான இரசனைக்கு இந்தப் படம் மனதைவிட்டு அகல இரண்டு, மூன்று நாட்களாவது ஆனாது.


படத்தை கடைசி இருபது நிமிடங்களுக்கு முன்னாலேயே முடித்திருக்கலாம். பஸ்ஸில் அடிபட்டு சாகும் லிங்குவின் அப்பாவிலிருந்து, விபத்தில் கால்போகும் கனிவரை படம் 'அளவுக்கு அதிகமாகவே' எதிர்மறை காட்சிகள்.  ஏதாவது ஒரு காட்சியில் யாரையாவது தனியாக காட்டினால் இவுங்களும் காலியா?! என்ற பதை பதைப்பை தவிர்க்க முடியவில்லை. அந்தளவுக்கு  அனைத்து கதாபாத்திங்களுக்கும் வாழ்க்கையை ஒரு பெரும் சுமையாக சுமந்து செல்கிறார்கள்.

இருப்பினும், தமிழ் திரையுலகில் இப்படி ஓர் அழுத்தமான பதிவுக்கு வசந்தபாலன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

படத்தில் ஒரு கதாபாத்திரம் 'வெரிகோஸிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போவதுபோல வருகிறது. (அந்த கதாபாத்திரத்தையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை ;( )

'வெரிகோஸிஸ்' வந்தால் இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் இயக்குநரின் கற்பனையாகதான் இருக்க வேண்டும். இந்த நோயை அறுவை சிகச்சை மூலம் குணப்படுத்தகூடிய ஒரு ‘மெடிகல் டிவைஷ்’ (Medical Device) கம்பெனியில் (VNUS) வேலை செய்வதால் அந்த நோயைப் பற்றி ‘கொஞ்சம்’ அறிமுகமுண்டு.

அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்வர்களுக்கு இந்த நோய் வரலாம். ஆண்களைவிட பெண்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு. கால்வீக்கம், கால் பகுதி நரம்பில் இரத்தப்போக்கு இல்லாததால் ஏற்படும் வலி என இந்த நோய்க்கான அறிகுறி.



நம்ம நாட்டுல இந்த நோய்க்கான விழிப்புணர்வு எந்தளவுக்கு இருக்கிறதுனு தெரியலை. மேலைநாடுகளில் Cosemtics வகையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். மிகவும் எளிமையான, அன்றே வீடும் திரும்பவுமான எளிதான அறுவை சிகிச்சை!

எங்கள் நிறுவனம் தயார் செய்யும் மருத்துவ கருவியின் பெயர் Vnus Closure Procedure. ஒரு சில நிமிட செயல்முறை வீடியோ இங்கே!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails