முதலில் எந்த வரதராஜன் என்ற குழப்பம் இருந்தாலும், படங்களையும், செய்திகளையும் வாசிக்கும் பொழுது மிகுந்த அதிர்ச்சியாகவே இருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர். அறுபத்தி நான்கு வயதை கடந்தவர். நாற்பாதாண்டுக்கும் மேலாக பொதுவாழ்வு! கட்சிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்திருக்கிறார். ஊழலற்றவர். எளிமையானவர். ஆனால், இறுதியில் அவர் எடுத்த முடிவு... சில நிமிடங்கள் நினைத்து பார்த்தால், மனதில் வருத்தத்தயே தருகிறது.
குடும்பப் பிரச்சனை என்று செய்திதாள்களும், பெண் தொடர்பு என்று கட்சியும் அவர் மேல் வைக்கும் குற்றச்சாட்டுகள். கட்சியும் எந்தவொரு பெரிய விளக்கமும் கொடுக்காமல் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிட்டனுக்கு அவர் பதவியில் இருக்கும் பொழுது இதே போல் பெண் தொடர்பான குற்றச்சாட்டு இருந்தது. இல்லை என்று மறுத்து, அப்புறம் மன்னிப்பு கேட்டு ....ஊருக்கே...ம்ம்ம்..உலகத்துக்கே தெரிந்த ஒரு நிகழ்வு. பின் 'அதிலிருந்து' வெளிய வந்து - 'கத்திரீனா' புயல், 'கெய்தி' நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் மீண்டு வர அவருடைய பங்கும் முக்கியமானது. அரசாங்கமே அவரை அழைத்து 'உதவ முடியுமா?' என்று கேட்கிறது.
போன வருடம், என்னமோ சொல்லி வைத்துபோல, மாதத்திற்கு ஒரு செனட் என்று 'பெண் தொடர்பான குற்றச்சாட்டு ' செய்திகளானது (இதில் ஜனாதிபதிக்கு போட்டியிட்ட ஜான் எட்வர்டும் ஒருவர்!). 'டைம்' பத்திரிக்கையில் 'கவர் ஸ்டோரி'யானது!
மக்களுக்காக நேர்மையாகவும், தியாகத்துடனும் உழைத்த ஒரு தலைவருக்கு இந்த மாதிரி குற்றச்சாட்டில் இருந்து மீள்வது முடியாததா என்ன..? எது இவரை தற்கொலைக்கு இட்டுச் சென்றது? அவர் மறுத்த, அவர் மேலுள்ள களங்கத்துக்கு பதில்? அவமானங்களும், குற்றச்சாட்டுகளும் எல்லாம் கடந்து போகும் என்பது தெரியாதவரா இல்லை எல்லாமே புரியாத புதிர்தானா?
அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்!
Wednesday, February 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)

உண்மைத்தமிழன் பதிவு:
ReplyDeleteபுறக்கணிப்பு என்கிற மிகப் பெரிய கொடூரமான தண்டனையை மனச்சாட்சியுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் புறக்கணிப்பினால்தான் இந்தத் தோழர் தனது முடிவைத் தானே தேடிச் சென்றிருக்கிறார்.
தோழர். மாதவராஜ் அவர்களின் பதிவு
ReplyDeleteதேசம் பூராவும் அறியப்பட்ட ஒரு மனிதர், இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல துடிப்போடு செயலாற்றிய ஒரு தோழர், தன் வாழ்வின் அருமையான, பெரும்பாலான நாட்களை தன் தத்துவத்திற்காக செலவிட்ட ஜீவன், எப்போது தான் நிர்க்கதியானோம் என நினைத்தார் என்பது முக்கியமானது. இப்படியான சமயங்களில் ஆற்றுப்படுத்த, அரவணைக்க, ஆதரவோடு கரங்கொடுத்து நிற்க யாருமா அவருக்கு இல்லாமல் போனார்கள் என்பதுதான் கசப்பனாது, அதிர்ச்சியானது.
ஜெமோ:
ReplyDeleteமன்னித்துவிடுங்கள் தோழர். வரலாறு என்றுமே நன்றிகெட்டது, மறதி மிக்கது. அதை எங்கோ ஆழத்தில் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.