ஊர் வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. குழந்தைகளை முதல் வருடமே பெரிய நகரங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் சேர்த்து ‘மிரட்ட’ வேண்டாமே, நமக்கு தெரிந்த ஊரிலுள்ள பள்ளிகளில் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் திருநெல்வேலியில் தெரிந்த பள்ளியில் சேர்த்தாயிற்று!
வருடத்திற்கொருமுறை ஊருக்கு வந்தாலும், 15-20 நாட்களில் பார்க்கிற இந்தியாவிற்கும், இன்னும் 15-20(!) வருடங்கள் இங்கதான் அப்படினு பார்க்கிற இந்தியாவிற்கும் ரொம்பவே வித்தியாசம்! அப்ப இருந்த ‘பெருந்தன்மை’ இப்ப எங்க போச்சி?
2003ல் ஹைதராபாத்தில் ‘பஞ்சகுட்டாவில்’ நல்ல வசதியான இரண்டு அறையுள்ள வீட்டிற்கு குடுத்த வாடகை 7000 ரூபாய். 2010ல் இப்பொழுது நெல்லை மாநகரத்தில் கொடுக்கும் வாடகை 6000ரூபாய்! பத்து மாதம் அட்வான்ஸ்யை ஐந்து மாதமாக குறைக்க சொல்லி கேட்டதற்கு வீட்டுக்கு சொந்தகாரர் கேட்ட கேள்வி ‘உங்களால இத குடுக்க முடியாத என்ன?’ (ம்ம்ம்..அது சரி!)
Wednesday, July 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment