Wednesday, February 17, 2010

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு 2010

கடந்த வெள்ளி (பிப்ரவரி 12, 2010) கனடாவின் வேன்குவர் (Vancouver)ல் குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள் ஆரம்பமானது. அருமையான, கண்கவர் தொடக்க நிகழ்வுகள்.












மொத்தம் 82 நாடுகள். வீரர்களின் அணிவரிசையில் பனிபொழிவையே பார்க்காத சில நாடுகளான கானா, எத்தியோப்பியாவும் (தலா ஒரு வீரர்) கலந்து கொண்டது ஆச்சரியாமவே இருந்தது.



இந்தியாவில் இருந்து 3 வீரர்கள். பரவாயில்ல..இந்தியாவிலகூட இந்தமாதிரி விளையாட்டுக்கெல்லாம் அனுப்புறாங்க. கிரிக்கெட்டை தவிர வேற எந்த விளையாட்டுபோட்டியும்தான் நமக்கு  தெரியாதே...

இந்திய கொடியை ஏந்தி வந்தது சிவா கேசவன். இவர் கலந்துகொள்ளும் போட்டி லூஜ் (Luge)! ஆமாம்... இந்த ஒலிம்பக் போட்டியிலேயே படுஆபத்தான போட்டி. இந்த போட்டியில்தான் ஜோர்ஜிய வீரர் ஒருவர் பயிற்சியின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். 2010 ஒலிம்பிக்கின் மறக்க முடியாத அதிர்ச்சியான, சோகமான சம்பவம்!



1.1 பில்லியன் மக்கள்தொகை! 1,000,000,000 மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டுக்கு பிரதிநிநியாக மூன்றே வீரர்கள்!!

இதாவது பரவாயில்லை. தொடக்க விழாவில் இவருக்கான சரியான சீருடை இல்லை, இவருடைய போட்டிக்கான உபகரணங்கள் பழுதடைந்த நிலையில்... இப்படி அடிப்படை வசதிகள்கூட பண்ணி தரக்குடிய முடியாத இந்திய நிர்வாகிகள்.... இப்படியான செய்திகள் கேள்விபடும்பொழுது எரிச்சலே அதிகமாகிறது. இதற்கு ஒலிம்பிக்  விளையாட்டுக்கு அனுப்பாமலே இருந்திருக்கலாம்.

இவரைத்தவிர அல்பைன் பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் ஜாம்யங் நம்ஜியால் என்பவரும், நெடுந்தூர பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் டாஷி லண்டுப் ஆகியோருமே மற்ற இருவர்!

நேற்று பார்த்தில் (பிப்ரவரி 14, 2010) சிவா கேசவன் லூஜ் போட்டியில் 27வது இடத்திலிருந்து 28வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

ஒவ்வொருமறையும் இதுபோன்று ஒலிம்பிக் போட்டி அல்லது உலகளவில் நடக்கும் ஏதாவது சில போட்டிகளின் போதும் புலம்பிவிட்டுபோவதே பழக்கமாகிவிட்டது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails