Friday, June 15, 2012

போகிற போக்கில் - ஜூன் 15,2012

ஜனாதிபதி தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் காமடியா போயிக்கிட்டு இருக்கு. புதுக்கோட்டை இடைத்தேர்தல் வேட்பாளர்களை விட ஜனாதிபதி தேர்தலுக்கான பட்டியல் பெரிசா இருக்கும் போல தெரியுது!
பிரணாப்
கலாம்
சோம்நாத்
சங்மா
அன்சாரி
கோபாலகிருஷ்ண காந்தி
மன்மோகன் சிங்

அட போங்கப்பா ..... ஜனாதிபதியா யாரு வந்தான்ன....
@

சமீபத்தில் கிடைத்த கவிஞர் பா.விஜயின் 'உதிராத நிலாக்கள் - பாகம் 2' படித்துப் முடிக்கப்போகிறேன். விறுவிறுப்பாக இல்லையெனிலும் பல தகவல்கள் புதிது. ஸ்ரீரங்கப் பெருமாள், நெப்போலியன், அலெக்சாண்டர் பற்றிய பல புதிய தகவல்கள்.

இதைவிட உதிராத நிலாக்கள் - பாகம் 1 நல்லாயிக்கும் னு இந்தப் புத்தகத்தை படிக்க தந்த நண்பர் சொன்னார்.
@

நானும் எப்படியாவது தியேட்டர்ல (!) போயி உறுமியும், வழக்கு எண்ணும் பார்த்திரலாம்னு பார்த்தா வார இறுதியில் முக்கியமான வேலைகள் வந்திருது.
இப்படி விடுபட்டுப்போன சில படங்கள்;
போராளி
பாலை

பார்க்கலாம் எப்படி பார்க்க போறேனு - டிவியிலேயா இல்ல டிவிடிலயானு!
@@@

Saturday, January 29, 2011

அண்ணா ஙாற்றாண்டு ஙாலகம்

முழுவதும் குளிரூட்டப்பட்ட, அருமையான, சுத்தமான எட்டு மாடி கட்டிடம். கட்டிடத்தை சுற்றி புல்வெளி தயாராகி கொண்டிருக்கிறது. இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் நிறுத்துவதற்கு போதுமான இடவசதியும் தயார் ஆகிகொண்டிருக்கிறது. வரவேற்பறையில் நாம் கேக்கும் கேள்விக்கு அக்கறையுடன் பதில்.  அதன் அருகில் சட்டசபை போல மிகப்பெரிய இரண்டு Conference room!  ஙாலகம் முழுவதும் வெளிச்சம்! தரையை, படிக்கட்டுகளை சுத்தம் செய்தபடியே ஆட்கள். ஆச்சரியமாகதான் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு ஙாலகத்திற்கு  இப்படி ஒரு வசதியா?




வரவேற்பறை அருகே மாற்றுத் திறனாளிகளுக்கான படிக்கும் அறை.

முதல் மாடி குழந்தைகளுக்கான "வளாகம்". வித விதமான புத்தகங்கள்.  கீதை, இராமயாணம், அனுமான், பைபிள் குட்டிக் கதைகளிலிருந்து  Oxford series, Apple books, Magictree house, JunieBee Jones, A to Z series, Dora, Clifford, Calliou இப்படி ஏகப்பட்ட ஆங்கில புத்தகங்கள். நீதிகதைகள், தெனாலிராமன், பீர்பால் மற்றும் அம்பை போன்ற எழுத்தாளர்கள் மொழி பெயர்ப்பு செய்த கதைகள் என்று மற்றொரு வரிசை.

கணிப்பொறியில் விளையாட்டுகள், குழந்தைகளுக்கான படங்கள் என்று அது ஒருபுறம்.  குழந்தைகள்  அம்மா, தாத்தாக்களுடன்  விளையாடி கொண்டே படித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது மனதில் ஒரு பரவசம்!

மற்றொரு பக்கம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் செய்தித்தாள்கள் மற்றும் நாளிதழ்கள். பல பல பல நாளிதழ்கள், செய்திதாள்கள்! ஆராய்சி கட்டுரைகள்!

முரசொலி, நமது எம்ஜியார், தமிழ் ஓசையிலிருந்து, காலச்சுவடு, தெகல்கா, துக்ளக் வரை அனைத்தும்.  

இரண்டாவது மாடி முற்றிலும் தமிழ் புத்தகங்களுக்கு! பெரிய புத்தகக் கடைகளில் அடுக்கி வைத்திருப்பதைப்போல அழகாக நேர்த்தியாக  அடுக்கி வைத்துள்ளார்கள். பாதிக்கு மேல் புதிய ஙால்கள்! சமீபத்தில் புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருப்பார்கள் போலும். இப்பொழுதான் அனைத்திற்கும் எண்வரிசையிட்டு அடிக்கி வைத்துகொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது, நான்காவது மாடி ஆங்கில புத்தகங்கள். கணிப்பொறி,மருத்துவம்,தத்துவம் வகையான புத்தகங்கள். நாவல்கள் அதிகமாக கண்ணில் படவில்லை.

வாரத்திற்கு ஒருமுறை சென்றால் தாராளமாக  4 - 5 மணி நேரம் செலவிடலாம். இப்பொழுதான் குழந்தைகளுக்கான உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள்  குடுக்க ஆரம்பித்துள்ளார்கள். கட்டணம், மற்றும் எத்தனை புத்தகங்கள் எடுத்து செல்லலாம், மற்றவர்கள் எப்பொழுது உறுப்பினர்கள் ஆவது போன்ற விவரங்கள் விரைவில் வருமாம்.



தினமும் (ஏழு நாட்களும்!!)காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும். அரசு விடுமுறை நாட்களைத்தவிர!

60 - 70 சதவீத வேலைதான் முடிந்துள்ளது.  முதல் நான்கு மாடிக்குதான் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலை முடிய இன்னும் 2 - 3 மாதங்களாவது ஆகும்.  இதைபோல் ஒவ்வொரு நாளும், ஆண்டு முழுவதும் பராமரிப்பார்களா? வேதனையான, தெரிந்த பதில்தான்....!!? ஙாலகத்திற்கென்று இணையதளம் இருப்பதுபோல் தெரியவில்லை.

ஊருக்கு இதுபோல் ஒரு ஙாலகம் கட்டினால், எனது ஓட்டை கலைஞருக்கு போடுவதை பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.

தெருக்கு இரண்டு டாஸ்மார்க் கடைக்கு பதிலாக ஒரு சின்ன ஙாலகம் இருந்தால் ..... ஆரம்பித்தால் ...

ம்ம்ம் ...'கனவு காணும் வாழ்க்கையாவும்.....' பாடலைதான் முணுமுணுக்க தோன்றுகிறது.

@

Thursday, January 20, 2011

சென்னை புத்தக் கண்காட்சி - 3

* தமிழிலில் அகராதி  இருப்பது தெரிந்ததுதான். ஆனால்  'க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி'  ரொம்பவே ஆச்சரியமானது. பார்வையற்றோருக்கான பிரெய்ல் பதிப்பில்!  பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

*  சோர்வு நீங்க, கொஞ்ச நேரம் மணிமேகலை பதிப்பகத்திற்கு சென்றால் போதும். நாம் நினைக்கிற மற்றும் கற்பனையே பண்ணிப் பார்த்திராத தலைப்பில் புத்தகங்கள்! அதே நேரம், லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள்  பல தொகுதிகளாக வந்திருந்தது. ஒரு காலத்தில் கல்கண்டில் ஆர்வமாக வந்த பொழுது படித்த கட்டுரைகள். பின்பு நண்பன் அந்தக் கட்டுரை தொகுப்பை பரிசாக கொடுத்தது. 

* தூர்தர்ஷன்கூட கடை வைத்திருந்தார்கள். தில்லுதான்!!

* அனேகமா எல்லா கடைகளிலும் கிடைக்கும் புத்தகமாக இருப்பது, பொன்னியின் செல்வனாகத்தான் இருக்கும்!

* வாங்க மறந்ததில், பத்ரி எழுதிய ஸ்பெக்ட்ரம் சர்ச்சை! இந்த வார இந்தியா டுடேயில்  திமுக கண்மனிகள் இந்த புத்தகத்தை 'வினியோகம்' செய்த செய்தி வந்திருந்தது. அட!!



இந்த வருடம் புத்தக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:
1. புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
2. உடையார் (பாகம் 1) - பாலகுமாரன்
3.  இன்றைய காந்தி - ஜெயமோகன்
4. எழுதும் கலை - ஜெயமோகன்
5. இந்திய ஞானம்  - ஜெயமோகன்
6. சூடிய பூ சூடற்க  - நாஞ்சில் நாடான்
7. இதற்கு முன்பும், இதற்கு பிறகும் - மனுஷ்ய புத்திரன்
 8. உறவுகள் - டாக்டர் ருத்ரன்
9. தகவல் பெறும் உரிமை - மக்கள் கண்காணிப்பகம் வெளியீடு
10. வாழ்க்கை முத்துக்கள் - சுகி.சிவம்
11. Roadguide to Chennai (TTK Publications)

வாங்க வேண்டிய, (இப்பொழுது விடுபட்ட)  புத்தகங்கள்:
1. ஆழிசூழ் உலகு-ஜோ.டி.குரூஸ்
2. துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்
3. உடையார் (பாகம் 3-6) - பாலகுமாரன்
4. கொற்றவை - ஜெயமோகன்

@

Monday, January 10, 2011

சென்னை புத்தக் கண்காட்சி - 2

இத்தனை கடைகளையும், பதிப்பங்களையும் பார்த்து கொஞ்சம் பிரமிப்பாக இருந்தாலும்  உட்காருவதற்கு கண்காட்சியில் இடமில்லை. ஆனால் நம் மக்கள் கட்டுச்சாதம் கட்டிவந்து கீழே உட்காந்து பட்டையை கிளப்பி கொண்டிருந்தார்கள்.

உடுமலை.காம்  போல  தமிழ் புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய மற்றொரு  பிரத்தேயக இணையதளம், நன்னூல் . இந்த புத்தக் கண்காட்சியில்தான் புதுமனை புகுவிழா பண்ணியுள்ளார்கள்.

ஒரு பதிப்பகத்தில் அவர்களுடைய favourite எழுத்தாளர்கள் படம் வைத்திருந்தார்கள். இந்த எழுத்தாளர் அம்மாவை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது.   அட நம்ம துளசி கோபால். பிரபல பதிவர்!!  'நியூசிலாந்து', 'என் செல்ல செல்வங்கள்' இரண்டு புத்தகங்களை எடுத்து காண்பித்தார்கள். முன்னுரை மட்டும் படித்துவிட்டு கிளம்பினேன்.



காலச்சுவடு பதிப்பகத்தில்  கண்ணன் இருந்தார். தமிழ்நதியின்  “ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்" வாங்கலாம் என்று  கொஞ்ச நேரம் புத்தகத்தை புரட்டினேன்.  ஏற்கனவே அவருடைய இணையதளத்தில் வந்த செறிவான மனதை பாதித்த கட்டுரைகள். ஏற்கனவே படித்ததுதான் என்பதால் வாங்கவில்லை.  காலச்சுவடு பதிப்பகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 ஙால்களில் ஒன்றை வாங்கினால் மற்றொன்று இலவசம், புக் கிளப், சுராவின் ஐந்தாம் ஆண்டு நினைவையொட்டி அவருடைய மூன்று நாவல்கள் 500ரூபாய் இப்படி சிறப்புச் சலுகைகள் இருந்தது.

உயிர்மையில் எழுத்தாளர்கள் வாரியாக அடுக்கி வைத்தது புத்தகங்களை கண்டுபிடிப்பதற்கு எளிதாக இருந்தது. சுஜாதா, சாரு, எஸ்ரா...இந்த வரிசையில் கூட்டம் இருந்தது. ஒரு பெண்மணி தன்னுடைய தோழனுடனோ, தோழியுடனோ அலைபேசியில், '"தேகம்"  கட்டுரை இல்லையாம். நாவலாம். வாங்கட்டா...அப்புறம் சுஜாதா எழுதினதில நல்லதா ஒண்ணு சொல்லு...' னு அங்க இருக்கிற புத்தகங்களை படித்து பட்டியலிட்டு கொண்டிருந்தார். சாருவும், ஷாஜியும் இப்பதான் போனர்கள் என்று அங்கிருந்தவர் சொன்னார்.  எஸ்ராவின் துயிலா  சாருவின் தேகமா ? என்ற யோசனையுடன், மனுஷ்ய புத்திரனின் 'இதற்கு முன்பும், இதற்கு பிறகும்' புத்தகத்தை  வாங்கிக் கொண்டு அவரிடம் ஒரு ஹலோ சொல்லிவிட்டு புத்தகத்தில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன். உயிர்மை வருடச்சந்தா  சிறப்பு சலுகையாக 150ரூபாய்!  அதில் பதிவு செய்து கொண்டு  ஞானியோட பதிப்பகம் எங்கே என்று கண்டுபிடித்து போனால் ஞானி அங்கிருந்தார்.

ஓ பக்கங்கள், அறிந்ததும் அறியாததும், நம் வாழ்க்கை நம் கையில், மற்றும் அவர் எழுதிய சில நாடகங்கள், அவருடைய ஒரே நாவல், தவிப்பு...இப்படி மிகச் சில புத்தகங்களே !

ஸ்பெக்ட்ரம் ஊழலில் யாருக்கு அதிக லாபம்? 1) திமுக, ராசா, கனிமொழி 2) திமுக, ராசா, கனிமொழி மற்றும் காங்கிரஸ். 3) ஊழலே நடக்கவில்லை.

இப்படி ஒரு சின்ன ஓட்டெடுப்பு வைத்திருந்தார்கள். 'கள்ள ஓட்டு போடலாமா, சார்'னு கேக்க, 'எல்லா கேள்வியும்  நல்ல கேள்விதான். இங்க வர்றவுங்க கள்ள ஓட்டெல்லாம் போடமாட்டாங்க...'  சொல்ல, அவருக்கு நன்றி சொல்லிட்டு ஓட்டையும் குத்திட்டு அடுத்த  எங்க போலாம்னு யோசிக்க .... பாராவை பார்த்தா  அவர்கிட்டேயும்  ஆட்டோகிராப் வாங்கலாம்னா அவர் கேண்டீனுக்கோ இல்ல பால்கோவா கடையிலயோ இருப்பாருனு தேடிட்டு கேண்டீன் பக்கம் போனேன்.

ஒரு நல்ல காபி மட்டுமே
கடவுள்கள், மனிதர்கள் உருவாக்கிய
எல்லாப் பிரச்சனைகளையும்
தீர்க்கக்கூடியது
என்று நினைத்தபடியே
மீண்டும் ஒருமுறை
தனது பணிநீக்க உத்தரவைப்
படிக்கத் தொடங்குகிறாள்
   - மனுஷ்ய புத்திரன் (இதற்கு முன்பும் இதற்கு பிறகும்)

@ (நாளை)

சென்னை புத்தகக் கண்காட்சி - 1

புத்தக் கண்காட்சியின் போது சென்னையில் இருப்பது இதுதான் முதன்முறை! வெள்ளி (7/1) , சனி(8/1) இரண்டு நாட்களும் சென்றிருந்தேன். பெருங்குடியிலிருந்து பச்சைப்பா கல்லூரிக்கு போக்குவரத்து நெரிசலையும் தாண்டி போவதற்குள் ஒரு வழியாகி விட்டது.




இந்தியாவில்...தமிழ்நாட்டில் இத்தனை  பதிப்பங்களா? அம்மாடியோவ்! சுமார் 450 ஸ்டால்களாவது இருந்திருக்கும். ஒவ்வொரு வழிக்கும் பாரதி, பாரதிதாசன்,ஷெல்லி இப்படி  பெயர் வேறு!

கடை எண் 1ல் முக்தா சினீவாசன் இருந்தார். அவருடைய புத்தகங்கள் (மட்டுமே) இருந்தது. கடை எண் 2 தினத்தந்தி. ஒரே புத்தகம்தான் -  'வரலாற்றுச் சுவடுகள்' (ரூ 350/-)! பெட்டி பெட்டியாக இறக்கி கொண்டிருந்தார்கள். நல்ல வளவளப்பான பேப்பரில் நல்ல தொகுப்பு போல் இருந்தது.

இப்படியாக நமக்கு தெரிந்த, தெரியாத(!) அத்தனை பெயர்களிலும் பதிப்பங்கள் - உமா, இஷா, பெரியார் அறக்கட்டளை, பெரியார், ஆழி, விஜய பாரதம், விடியல், பூவுலகு, University of Madras, The Hindu, தினமணி, தினமலர், மக்கள் தொலைக்காட்சி, Frozen Thoughts, பாரதி,  சில முஸ்லீம் கடைகள்,

நியூ செஞ்சரி, இலக்கியப்பண்ணை, Higgen Bothams போன்ற கடைகளும் 

அல்லயன்ஸ், கண்ணதாசன், நர்மதா, காவ்யா, தமிழினி, கிழக்கு,உயிர்மை,காலச்சுவடு, ஞானியோட ஞானபாங,விகடன்,குமுதம்..... போன்ற தெரிந்த பதிப்பங்களும்,

குழந்தைகளுக்கு - Apple, Peoples Watch, Dove Multimedia, Family Spoken English, கிழக்கின் Prodigy......

எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக 'புதிய தலைமுறை'!  புதிய தலைமுறை அரங்கம், புதிய தலைமுறை பேனர்கள் என்று எங்கும் பார்த்தலும் புதிய தலைமுறையின் விளம்பரமாகவே இருந்தது. இந்த வார இதழ் வாங்கினால்,  புத்தக் கண்காட்சி ஙழைவுச்சீட்டு (ரூ 5/-)ம்,  நமக்கு பிடித்த ஒரு பழைய இதழும் இலவசம்.  நல்ல யுக்தி! நான் 24 டிசம்பர் 2009 [சிறிய மாநிலங்கள் நல்லதா? கெட்டதா?] இதழும் வாங்கிக்கொண்டேன்.

@ (நாளை...)

Tuesday, January 4, 2011

மன் மதன் அம்பு

'கமல்ஜி, ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். அதுல நீங்கதான் நடிக்கணும்!'

'ஓ... தாராளமா... ரொம்ப வருஷமா என்கிட்ட ஒரு (பழைய) கதை இருக்கு..'

'ஆஹா..அப்படியா. நல்லது.  பெரிய பட்ஜெட் படம்மா எடுக்கலாம். ஆனா படம் பத்து நாளைக்கு  மேல ஓடக்கூடாது. அதே சமயம் அன்பே சிவம், ஹே ராம் மாதிரி உங்களுக்கும் நல்ல பேரும் வந்துடகூடாது. காமெடி படமா எடுத்துடலாமா? '

'ம்ம்ம்...அப்ப நானே திரைக்கதையும் பாத்துகிறேன்.'

'காமெடி படம்கிறதால  கிரேஷி மோகனை வசனம் எழுத கேக்கலாமா?'

'படம் பத்து நாளைக்கு மேல ஓட கூடாதுனு வேற சொல்லுறீங்க. அப்புறம் கிரேஷி எதுக்கு... அதையும் நானே பாத்துகிறேன். '

'நடிகர்கள்.....'

'ம்ம்ம்...அதைப்பத்தி கவலைப்படாதீங்க. நீங்க நடிக்கீறீங்களா?'

'ஹி..ஹி..ஹி.... க்ளைமாக்ஸ்....'

'பஞ்சதந்திரம் மாதிரி ட்ரை பண்ணலாமா இல்ல தெனாலி, அவ்வை சண்முகி மாதிரி ட்ரை பண்ணிபாக்கலாமா?'



2010 - வருடக் கடைசியில் பார்த்த படம்.

என்ன ஆச்சி, கமலுக்கு! மத்த படம்  மாதிரி 'அதிர' வேண்டாம். 'உலக நாயகன்' பட்டத்தை வைச்சிகிட்டு இப்படி ஏமாத்தகூடாது. கதை என்ன... அது காமெடியா, ஆக்க்ஷனா .... ஒண்ணும் புரியலை!

வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை இல்ல! பொறுமையின் உச்சகட்டம்தான் அகிம்சை. அதுவும் உங்களுக்காக பார்த்த அந்த 'இரண்டரை மணிநேரம்..'!

@

Thursday, December 30, 2010

இந்தியா 3030

இந்தியா வந்து 90 நாட்கள் ஆகிவிட்டது.  ஊருக்கு வந்த சில தினங்களிலேயே அரசு அலுவலகங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது..... விதியின் சதியா என்பது தெரியவில்லை.

இனிமேல் யாரவது '2020வில் இந்தியா வல்லரசு ஆகும் - சீனாவுடன் போட்டிபோட இந்தியாவைவிட யாருக்கு தகுதி இருக்கிறது - உலகிலேயே சீனாவுக்கு அடுத்து நம்ம நாடுதான் பொருளாதரத்தில் சிறந்து விளங்குகிறது' என்று 'தேசப்பற்றுடன் கனவு கண்டு கொண்டிருப்பவர்களை' பார்த்தால் அனுதாபம் படுவதைவிட வேற என்ன செய்ய...?



எத்தனை பெரியாரும், காந்தியும் வந்தாலும் திருத்தவே முடியாத ஒரு சமூகம்  ஊழலில் திளைத்தவர்களாகவும் , நேர்மை துளியும் இல்லாதவர்களாகவும், வார்க்கப்பட்டு, வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

@

ஆகஸ்டு, 27,2010

Monday, December 13, 2010

நந்தலாலா

மாதம் ஒன்று கிறுக்க வேண்டும் என்று தோன்றினாலும், நேரமின்மையும், சோம்பேறித்தனமும் இந்தப்பக்கமே வரமுடியாமல் செய்கிறது.

நந்தலாலா, அம்பேத்கார் பார்க்கவேண்டும். ஆனால் அதுக்குள் அம்பேத்கார் காலை 9 மணி காட்சி மட்டும் பேருக்கு போட்டுவிட்டு ''சிக்கு புக்கு'' ஓடிக் கொண்டிருக்கிறது.  அதே நிலை "நந்தலாலா"வுக்கு ஆகும் முன் பார்த்துவிடலாம் என்று எண்ணத்தில் நேற்று பார்த்தது.
 
மிஷ்கினின் முதல் இரண்டு படங்களும் எனக்கு பிடித்திருந்தது. 

நந்தலாலா - 

இளையராஜா, மிஷ்கின், அந்த குட்டிபையன் தவிர்த்து - பள்ளி மாணவி, லாரி ஓட்டுநர், இளநீர்க்காரக் கிழவர், போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட அந்த நபர்  என்று படம் முழவதும் வரும் அனைத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாழ்க்கைக்கு பல அர்த்தங்கள் சொல்பவை!


இறுதியாக - 

“நீங்க என்ன சாதி அண்ணே?”
“மெண்டல்”
“அப்படி ஒரு சாதி இருக்கா அண்ணே?”

Thanks, மிஷ்கின்!
Related Posts with Thumbnails