Tuesday, April 27, 2010

அங்காடித் தெருவும், வெரிகோஸ் நோயும்

திரையரங்கில் நான்கே பேர். எங்களுக்காக சிறப்பு  (கடைசி) காட்சி!

மசாலா படங்களையே பார்த்து பழக்கமான இரசனைக்கு இந்தப் படம் மனதைவிட்டு அகல இரண்டு, மூன்று நாட்களாவது ஆனாது.


படத்தை கடைசி இருபது நிமிடங்களுக்கு முன்னாலேயே முடித்திருக்கலாம். பஸ்ஸில் அடிபட்டு சாகும் லிங்குவின் அப்பாவிலிருந்து, விபத்தில் கால்போகும் கனிவரை படம் 'அளவுக்கு அதிகமாகவே' எதிர்மறை காட்சிகள்.  ஏதாவது ஒரு காட்சியில் யாரையாவது தனியாக காட்டினால் இவுங்களும் காலியா?! என்ற பதை பதைப்பை தவிர்க்க முடியவில்லை. அந்தளவுக்கு  அனைத்து கதாபாத்திங்களுக்கும் வாழ்க்கையை ஒரு பெரும் சுமையாக சுமந்து செல்கிறார்கள்.

இருப்பினும், தமிழ் திரையுலகில் இப்படி ஓர் அழுத்தமான பதிவுக்கு வசந்தபாலன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

படத்தில் ஒரு கதாபாத்திரம் 'வெரிகோஸிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போவதுபோல வருகிறது. (அந்த கதாபாத்திரத்தையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை ;( )

'வெரிகோஸிஸ்' வந்தால் இறந்து விடுவார்கள் என்பதெல்லாம் இயக்குநரின் கற்பனையாகதான் இருக்க வேண்டும். இந்த நோயை அறுவை சிகச்சை மூலம் குணப்படுத்தகூடிய ஒரு ‘மெடிகல் டிவைஷ்’ (Medical Device) கம்பெனியில் (VNUS) வேலை செய்வதால் அந்த நோயைப் பற்றி ‘கொஞ்சம்’ அறிமுகமுண்டு.

அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்வர்களுக்கு இந்த நோய் வரலாம். ஆண்களைவிட பெண்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு. கால்வீக்கம், கால் பகுதி நரம்பில் இரத்தப்போக்கு இல்லாததால் ஏற்படும் வலி என இந்த நோய்க்கான அறிகுறி.



நம்ம நாட்டுல இந்த நோய்க்கான விழிப்புணர்வு எந்தளவுக்கு இருக்கிறதுனு தெரியலை. மேலைநாடுகளில் Cosemtics வகையில் இந்த நோயை குணப்படுத்துவதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். மிகவும் எளிமையான, அன்றே வீடும் திரும்பவுமான எளிதான அறுவை சிகிச்சை!

எங்கள் நிறுவனம் தயார் செய்யும் மருத்துவ கருவியின் பெயர் Vnus Closure Procedure. ஒரு சில நிமிட செயல்முறை வீடியோ இங்கே!

Thursday, April 1, 2010

போகிற போக்கில் - ஏப்ரல் 1,2010

இப்பொழுதுதான், DVDயில் 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்தேன். ஒரு அருமையான fantasy கதையை சோழர்கள், பாண்டியர்கள்னு குழப்பி, இசை, கார்த்திக்கின் கடுப்படிக்கும் வசனம்/காமெடி, ரீமாசென்னு மேலும் வெறுப்பேத்தி..... 'ஆளை விடுங்கடா சாமி'னு ஒரு வழியா முழுப்படத்தையும் பார்த்தோம்(!).

சில நேரங்களில் படத்தைவிட பதிவுலகில் வரும் விமர்சனங்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகமாக்கும். அந்த வகையில் இந்தப்படத்தை தாளரமாக சேர்க்கலாம். எவ்வளவுதான் உழைப்பு...மண்ணாங்கட்டினு பேசினாலும் 2 1/2 மணிக்கு அப்புறம் என்ன சொல்லவாராங்கனு புரியமா குழப்பும்போது எதையும் பாராட்ட தோன்றவில்லை!
@

எப்பொழுதுமே மலையாள படங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அவர்கள் எடுக்கும் கதைகளம், திரைக்கதை அதற்கு உயிர் கொடுக்கும் அருமையான நடிகர்-நடிகைகள்!

சமீபத்தில் பார்த்தது பிளஸ்ஸி(Blessy)யின் 'பிரம்மரம் (மலையாளம்)'. தமிழிலில் 'வண்டு'னு அர்த்தம்! சரியான தலைப்புதான்...

முதல் பகுதியில், விறு விறுப்புக்காக திரைக்கதை தடுமாறினாலும் இரண்டாம் பகுதி மனதை அள்ளுகிறது. வித்தியாசமான கதைகளம். சிவன்குட்டியாக மோகன்லால்! அவர் நடிப்புக்கு சரியான தீனி. அவருடைய மனைவியாக பூமிகா. அழுகுதான்..மலையாள கதாபாத்திரத்துக்கு  ஒத்துவரவில்லை!

பிளஸ்ஸியின் 'காழ்ச்சா' இன்னும் பார்க்கவில்லை. 'தன்மந்ரா' அருமையான திரைப்படம்! 'பலுங்கு' ஓகே!

'தன்மந்ரா' அளவுக்கு 'பிரம்மரம்' மனதில் பதியவில்லை. ஆனால் மோகன்லாலுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்!

@

இந்தவாரம் புனித வாரம் மற்றும் கிறிஸ்துவின் உயிர்ப்பு ஞாயிறு (ஈஸ்டர்).

தவக்கால ஆரம்பத்தில் - ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடமாவது பைபிள் படிக்கணும் நினைப்பு, நினைவாகவே இருக்கிறது. அதற்குள் ஈஸ்டரும் வந்து விட்டது. இனி அடுத்த ஆண்டுதான் நினைவுக்கு வரும்.

கல்லூரி நாட்களில் தவக்காலத்தில் நான்-வெஜிடேரியன் சாப்பிடாமல் இருப்பது பெரிய விசயமாக இருந்ததில்லை. இப்பொழுது...அதுவும் வெளிநாட்டில் இருக்கும் பொழுது அதுவே பெரிய சாதனையாக இருக்கிறது.

ஈஸ்டருக்கு அப்புறம்(!) ஒரு வருடத்திற்கு வெஜிடேரியனாக மாறலாம் என்பது எண்ணம். நண்பன் FBல் சொன்ன ஜப்பானிய தத்துவம் நினைவுக்கு வருகிறது..'ஆரம்பிப்பது எளிது. தொடருவது கடினம்!'

பார்க்கலாம்!

@@
Related Posts with Thumbnails