Friday, March 12, 2010

NASDAQ - 10 ஆண்டுகள்

மார்ச் 10, 2000 NASDAQ 5048 புள்ளிகளுடன் அதிஉச்சத்தில் இருந்த காலம்.

எந்த .com பங்குகள் வாங்கினாலும் இலாபம் தரக்கூடியதாகவே இருந்தது. அந்த கால கட்டத்தில் சும்மா வேடிக்கை பார்த்ததற்கு பதில் 'ஏதாவது' பங்குகள் வாங்கி போட்டிருந்தால் கொஞ்சம் சீக்கிரமாகவே ஊருக்கு கிளம்பி போயிருக்கலாம்?

பத்து ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டி பறந்த - Netscape, pet.com போன்ற கம்பெனிகள் இப்பொழுது இருந்த தடமே தெரியவில்லை. MCI டெலிகாம், என்ரான் என்று திவால் ஆன கம்பெனிகளின் பட்டியல் நீளம்.



2003-2004ல் பரஸ்பரநிதி (Mutual Fund) கம்பெனியில் வேலை. அதுவே பங்குச்சந்தை. பரஸ்பரநிதியின் மேல் ஆர்வம் வர காரணமாக இருந்தது. கிராமங்களிலும், நகரங்களிலும் இந்தியா ஒளிர்ந்ததோ இல்லையோ பங்குச்சந்தையில் நன்றாகவே ஒளிர்ந்தது. பூவா தலையா என்று போட்டு ஏதாவது சில பங்குகளிலும், பரஸ்பரநிதியிலும் முதலீடு செய்த காலகட்டம். கிளி ஜோசியம் போல எந்த சீட்டு எடுத்தாலும் இலாபகரமாகவே இருந்திருக்கும்.

பத்து வருடங்களுக்கு [மார்ச் 10, 2010] பிறகு NASDAQ ன் நிலை 2340 புள்ளிகள். வாழ்க்கையின் தத்துவம் போல அமெரிக்க பங்குச்சந்தை இருந்த இடத்திற்கே வந்து நிற்கிறது.

நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாகிவிட்ட Google, Twitter, Facebook, iPhone போன்றவைகள் முளைத்து, விஷ்பரூபம் எடுத்திருப்பது இந்த காலகட்டத்தில்தான்!

Wednesday, March 3, 2010

மெய்ப்பொருள்




எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.
Related Posts with Thumbnails