Sunday, July 18, 2010

இந்தியா 2010 - 'டாப் 10'

இந்தியா 2010 - ‘டாப் 10’ பட்டியல் போட்டால்…

1.    நான்கு வழி தேசியநெடுஞ்சாலை ஒரளவு முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் பல ஊர்கள் காணமல் போயிவிட்டன. ஆனால் லாரிகளும், பேருந்துங்களும், கார்களும் போற வேகத்தைப் பார்த்தால் காரை எடுக்கவே பயமாக உள்ளது. இதில் தினமும் 2-3 விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வில்லையென்றால்  இந்த ‘நான்கு வழிஇரத்தச்சாலை’யில் இதைவிட பயரங்களை பார்த்து தாங்கிக் கொள்ளகூடிய சக்தியை எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்வாராக!

2.    பணத்திற்கு மதிப்பே இல்லை! ஆனால் எங்கும் கூட்டம் குறைவாக இல்லை. பணத்திற்கு ஏற்றாற்போல் சேவையும் இல்லை. ‘முடிந்தவரை இவனிடம் எவ்வளவு கறக்கலாம்‘ என்பது போலவே பார்க்கிறார்களோ என்ற மனப்பிராந்தியை தவிர்க்க முடியவில்லை!

3.    விலைவாசி! அம்மாடியோவ்… தக்காளி கிலோ 40ரூபாய்,  மட்டன் 250, சிக்கன் 200, ஆப்பிள் 120,  நவ்வாப்பழம் 160!!

4.    சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெகா, வசந்த், பாலிமர், அபி, தமிழன், சித்திரம் என்று எத்தனை வந்தாலும் வீட்டில் அனைவருக்கும் அழ பிடித்த மெகா ஸாரி… நெடுந்தொடர்; ‘நாதஸ்வரமும்’, ‘செல்லமேமும்’ மற்றும் பல! வாழ்க சன்!! இதைவிட்டால் SSJ2, நீயா நானா, Z தமிழில் டாப் 10 செய்திகள் OK!

5.    Pogoவைத் தவிர மற்ற எல்லா குழந்தைகள் சேனல்களிலும் [Cartoon Network, Disney, Nick, Discovery] தமிழ் மொழிபெயர்ப்பு! அடக்கொடுமையே..சுட்டி டிவி, சித்திரம் போன்ற தமிழ் சேனல்களும் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சிகூடவா தமிழிலில் தயாரிக்க முடியவில்லை!

6.    கேபிளுடன், Tata Sky, Sun Direct, Dish என்று டிஜிட்டல், HD என்று எல்லாரும் மிரட்ட, நம் முதல்வர், டாக்டர் கலைஞர் கொடுத்த இலவச வண்ணத் தொ(ல்)லைக்காட்சியில் பார்க்க கேபிள் போதாத என்ன?

7.    மொபைல் இன்டர்நெட் மிகவும் பிரபலம்! BSNLக்காக மாதங்கள், வருடங்களாக காத்திருக்க வேண்டியதில்லை. TATA Photon, MTS என்று கூப்பிட்ட உடனே வீட்டில் வந்து நிற்கிறார்கள்! [இதில் MTS நல்லாயிருக்கு என்பது என் அனுபவம்.]

8.    போஸ்டர் போயி எங்கும் பேனர்கள், பிரமாண்ட டிஜிட்டல் அட்டைகள். திருமணம், பூப்புனித நீராட்டு விழாவிலிருந்து, பெருந்தலைவர்கள் வரை! அதுவும் தலைவர்களுக்கு நமது கழக கண்மணிகள் காட்டும் விசுவாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது: தென்னிந்தியாவின் சேகுவராவே, இளம் பெரியாரே, தமிழின் செம்மொழியே, இனக்காவலரே, நவீன காமராஜரே……….

9.    20-30 பேரே திரையரங்குகளிலிருந்த ‘ராவணனில்’ ரஞ்சிதாவுக்கும் விசிலடிக்கும் (அதே) ரசிக சிகாமணிகள்! ஐஸ்வர்யாவுக்கும், ப்ரியாமணிக்கும் கேக்கவே வேண்டாம்.

10.    பள்ளிக்கூடம், கல்லூரிகள்!!!

Wednesday, July 14, 2010

இந்தியா 2010

ஊர் வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. குழந்தைகளை முதல் வருடமே பெரிய நகரங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் சேர்த்து ‘மிரட்ட’ வேண்டாமே, நமக்கு தெரிந்த ஊரிலுள்ள பள்ளிகளில் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் திருநெல்வேலியில் தெரிந்த பள்ளியில் சேர்த்தாயிற்று!

வருடத்திற்கொருமுறை ஊருக்கு வந்தாலும், 15-20 நாட்களில் பார்க்கிற இந்தியாவிற்கும், இன்னும் 15-20(!) வருடங்கள் இங்கதான் அப்படினு பார்க்கிற இந்தியாவிற்கும் ரொம்பவே வித்தியாசம்! அப்ப இருந்த ‘பெருந்தன்மை’ இப்ப எங்க போச்சி?


2003ல் ஹைதராபாத்தில் ‘பஞ்சகுட்டாவில்’ நல்ல வசதியான இரண்டு அறையுள்ள வீட்டிற்கு குடுத்த வாடகை 7000 ரூபாய். 2010ல் இப்பொழுது  நெல்லை மாநகரத்தில் கொடுக்கும் வாடகை 6000ரூபாய்! பத்து மாதம் அட்வான்ஸ்யை ஐந்து மாதமாக குறைக்க சொல்லி கேட்டதற்கு வீட்டுக்கு சொந்தகாரர் கேட்ட கேள்வி ‘உங்களால இத குடுக்க முடியாத என்ன?’  (ம்ம்ம்..அது சரி!)
Related Posts with Thumbnails