Saturday, January 29, 2011

அண்ணா ஙாற்றாண்டு ஙாலகம்

முழுவதும் குளிரூட்டப்பட்ட, அருமையான, சுத்தமான எட்டு மாடி கட்டிடம். கட்டிடத்தை சுற்றி புல்வெளி தயாராகி கொண்டிருக்கிறது. இரண்டு சக்கரம், நான்கு சக்கரம் நிறுத்துவதற்கு போதுமான இடவசதியும் தயார் ஆகிகொண்டிருக்கிறது. வரவேற்பறையில் நாம் கேக்கும் கேள்விக்கு அக்கறையுடன் பதில்.  அதன் அருகில் சட்டசபை போல மிகப்பெரிய இரண்டு Conference room!  ஙாலகம் முழுவதும் வெளிச்சம்! தரையை, படிக்கட்டுகளை சுத்தம் செய்தபடியே ஆட்கள். ஆச்சரியமாகதான் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு ஙாலகத்திற்கு  இப்படி ஒரு வசதியா?




வரவேற்பறை அருகே மாற்றுத் திறனாளிகளுக்கான படிக்கும் அறை.

முதல் மாடி குழந்தைகளுக்கான "வளாகம்". வித விதமான புத்தகங்கள்.  கீதை, இராமயாணம், அனுமான், பைபிள் குட்டிக் கதைகளிலிருந்து  Oxford series, Apple books, Magictree house, JunieBee Jones, A to Z series, Dora, Clifford, Calliou இப்படி ஏகப்பட்ட ஆங்கில புத்தகங்கள். நீதிகதைகள், தெனாலிராமன், பீர்பால் மற்றும் அம்பை போன்ற எழுத்தாளர்கள் மொழி பெயர்ப்பு செய்த கதைகள் என்று மற்றொரு வரிசை.

கணிப்பொறியில் விளையாட்டுகள், குழந்தைகளுக்கான படங்கள் என்று அது ஒருபுறம்.  குழந்தைகள்  அம்மா, தாத்தாக்களுடன்  விளையாடி கொண்டே படித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் பொழுது மனதில் ஒரு பரவசம்!

மற்றொரு பக்கம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் செய்தித்தாள்கள் மற்றும் நாளிதழ்கள். பல பல பல நாளிதழ்கள், செய்திதாள்கள்! ஆராய்சி கட்டுரைகள்!

முரசொலி, நமது எம்ஜியார், தமிழ் ஓசையிலிருந்து, காலச்சுவடு, தெகல்கா, துக்ளக் வரை அனைத்தும்.  

இரண்டாவது மாடி முற்றிலும் தமிழ் புத்தகங்களுக்கு! பெரிய புத்தகக் கடைகளில் அடுக்கி வைத்திருப்பதைப்போல அழகாக நேர்த்தியாக  அடுக்கி வைத்துள்ளார்கள். பாதிக்கு மேல் புதிய ஙால்கள்! சமீபத்தில் புத்தகக்கண்காட்சியில் வாங்கியிருப்பார்கள் போலும். இப்பொழுதான் அனைத்திற்கும் எண்வரிசையிட்டு அடிக்கி வைத்துகொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது, நான்காவது மாடி ஆங்கில புத்தகங்கள். கணிப்பொறி,மருத்துவம்,தத்துவம் வகையான புத்தகங்கள். நாவல்கள் அதிகமாக கண்ணில் படவில்லை.

வாரத்திற்கு ஒருமுறை சென்றால் தாராளமாக  4 - 5 மணி நேரம் செலவிடலாம். இப்பொழுதான் குழந்தைகளுக்கான உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்கள்  குடுக்க ஆரம்பித்துள்ளார்கள். கட்டணம், மற்றும் எத்தனை புத்தகங்கள் எடுத்து செல்லலாம், மற்றவர்கள் எப்பொழுது உறுப்பினர்கள் ஆவது போன்ற விவரங்கள் விரைவில் வருமாம்.



தினமும் (ஏழு நாட்களும்!!)காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணிவரை திறந்திருக்கும். அரசு விடுமுறை நாட்களைத்தவிர!

60 - 70 சதவீத வேலைதான் முடிந்துள்ளது.  முதல் நான்கு மாடிக்குதான் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலை முடிய இன்னும் 2 - 3 மாதங்களாவது ஆகும்.  இதைபோல் ஒவ்வொரு நாளும், ஆண்டு முழுவதும் பராமரிப்பார்களா? வேதனையான, தெரிந்த பதில்தான்....!!? ஙாலகத்திற்கென்று இணையதளம் இருப்பதுபோல் தெரியவில்லை.

ஊருக்கு இதுபோல் ஒரு ஙாலகம் கட்டினால், எனது ஓட்டை கலைஞருக்கு போடுவதை பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.

தெருக்கு இரண்டு டாஸ்மார்க் கடைக்கு பதிலாக ஒரு சின்ன ஙாலகம் இருந்தால் ..... ஆரம்பித்தால் ...

ம்ம்ம் ...'கனவு காணும் வாழ்க்கையாவும்.....' பாடலைதான் முணுமுணுக்க தோன்றுகிறது.

@

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails